You are hereதமிழ்
தமிழ்

பிரநீஷ் சரணுக்கு மொட்டை

பிரநீஷ் சரணுக்கு காதுகுத்தி மொட்டையடிக்க எங்கள் குலதெய்வம் மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்கு போனோம்.சிறுமுகை மாமாவுக்கு முடி வெட்டுபவரை வைத்து பிரநிஷ்க்கு மொட்டையடித்தோம், அவர் அருமையாக மொட்டையடித்தார். மொட்டையடிக்கும் போது அமைதியாக தாத்தா மடியில் உட்கார்ந்திருந்தான். பின்னர் குளிப்பாட்டி காதுகுத்தினோம், காது குத்தும்போது நரம்பின்மீது படாதவண்ணம் கவனமாக செய்ய வேண்டும். அதை செய்தவரும் அருமையாக செய்தார், முன்றே நிமிடத்தில் இரண்டு காதையும் குத்தினார். காதுகுத்தும் போது சரியான அழுகை. காதாணியில் கூர்மையான தங்க ஊசியை பொருத்தி, காதின் சரியான பகுதியில் வைத்து அழுத்தினால்; காது ஓட்டை விழ உடன் காதாணியும் ஓட்டையில் மாட்டிவிடும். பிறகு அந்த ஊசியை கழற்றிவிட்டு திருகாணியை மாட்டிவிட வேண்டியது தான்.

Reached home for pongal
Reached home just in time for பொங்கல், had a bunch of events lined up. பொங்கல், மாட்டுப்பொங்கல், மொட்டை/காதுகுத்து, கடாவெட்டு.
We also had to go around visting our relatives.

தனிமை தனிமையோ
"நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்ததே...
.
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெலுகுவர்தியும்...
தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ..."

என் முதல் பதிவு தமிழில்
வெகுகாலமாக என் பதிவுகளை தமிழில் செய்யவேண்டும் என்று ஆசை. இன்று ஆரம்பித்து விடுவதுதான் :-)
இதற்கான உத்வேகம் அளித்தது கலசம் என்ற இனையதளம். ஆங்கிலம் தமிழ் இரண்டயும் குதறிக் கொண்டிருக்கும் இன்றய வானெலி தொகுப்பாளர்கள் மத்தியில் தனித்து நிற்பது கலசம்.
தெளிவான பேச்சு, அடக்கமான பேச்சு மற்றும் நிகழ்சிகளை தொகுத்து அளிக்கும் விதம் அருமை.