என் முதல் பதிவு தமிழில்
August 14, 2008 by Saravana Perumal
வெகுகாலமாக என் பதிவுகளை தமிழில் செய்யவேண்டும் என்று ஆசை. இன்று ஆரம்பித்து விடுவதுதான் :-)
இதற்கான உத்வேகம் அளித்தது கலசம் என்ற இனையதளம். ஆங்கிலம் தமிழ் இரண்டயும் குதறிக் கொண்டிருக்கும் இன்றய வானெலி தொகுப்பாளர்கள் மத்தியில் தனித்து நிற்பது கலசம்.
தெளிவான பேச்சு, அடக்கமான பேச்சு மற்றும் நிகழ்சிகளை தொகுத்து அளிக்கும் விதம் அருமை.
பாடல்களுக்கு இடையே விளம்பரம் என்று இல்லாமல்; சுவாரஸ்யமான செய்தி துணுக்குகள். பட்டிமன்ற தொகுப்புகள், சுவையான உரையாடல்கள் என அசத்துகின்றது கலசம். எப்போது பாடல் முடியம், எப்போது அடுத்த துணுக்கு கேட்கலாம் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது.
பிற வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் இதனை பின்பற்றினால், தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாக உதவிடும்.
இது போன்று மற்ற இனய மற்றும் இனயதளம் பற்றி உங்களுக்கு தெரிந்தால் கீழே உள்ள கருத்துப் பதிவில் பதியவும்.

Comments
சாருதண்டு , அந்த 020 வண்ண
August 14, 2008 by konan (not verified), 12 weeks 4 days ago
சாருதண்டு ,
அந்த 020 வண்ண படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.
"டைனோசர் தன் குட்டிய பார்க்கிறது"
:-)
:-)
Post new comment